முதல்
FIFA உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதிச்சுற்றில் இரண்டு அணிகள் சிறப்பாக விளையாடின.
26th ஜூலை
1930 நடந்த போட்டியில் அர்ஜென்டீனா
6-1 என்ற கணக்கில் ஐக்கிய அமெரிக்காவை வென்றது. அதைப்போன்று
27th ஜூலை
1930 நடந்த போட்டியில் உருகுவே
6-1 என்ற கணக்கில் யூகோஸ்லாவியாவை விழ்த்தி வெற்றி கண்டது. அதனால் முதல்
FIFA உலகக் கோப்பை போட்டியின் இறுதியில் அர்ஜென்டீனாவும் உருகுவேயும் மோதின. யாரும் எதிர்பார்க்காத வண்ணம்
68000 ரசிகர்கள் உதைபந்த்தாட்டத்தை கண்டுகளிக்க
'Estadio Cetenario'விற்கு வந்திருந்தார்கள். பெல்ஜியத்தை சேர்ந்த நடுவர்
Jean Langenus, 15:30 மணிக்கு ஆட்டத்தை தொடக்கிவைத்தார். இடைவேளைக்குமுன் அர்ஜென்டினா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால் ஆட்ட இறுதியில் 4-2 என்ற கணக்கில் உருகுவே வெற்றிபெற்றது.
|
1930 FIFA World Cup Official Poster
|